கத்தாரில் திமுக GEN-Z இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி!

கத்தாரில் திமுக அயலக அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் ‘GEN-Z’ இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இளைஞர் அணி அமைப்பாளர் தஞ்சை ஏ. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்பாளர் மதன்குமார், அவைத் தலைவர் ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை அமைப்பாளர்கள் வாளாடி ராஜ்குமார், பாலாஜி, கோபால், ஹக்கீம், பரந்தாமன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் A. அசாருதீன், குரு, ராவுத்தர், Sky தமிழ் முத்துப்பாண்டி, பிரகாஷ், அப்பாஸ், நசீர், அசாருதீன் உட்படப் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஆலிம் அல் புகாரி மற்றும் GEN-Z ஒருங்கிணைப்பாளர் யாசர் அராஃபத் ஆகியோர், திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் திமுகவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினர்.

கத்தாரில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, “மீண்டும் முதல்வர் ஸ்டாலின்” என்ற எழுச்சி முழக்கத்துடன் நிறைவுற்றது.