
நடப்பு ஆண்டின் அடுத்த 6 மாத காலப்பகுதிக்கும் (ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை) நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு இருமுறை கட்டண மறுசீரமைப்பு செய்வது வழக்கமாக இருந்தபோதிலும், இம்முறை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் 18% உயர்ந்தாலும், அது நீர் உற்பத்தியில் 12% மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒரு அலகுக்கான செலவு வெறும் 2.50 ரூபாவாலேயே அதிகரித்துள்ளது. எனவே, செலவுகள் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் மீது சுமையை ஏற்றாமல் கட்டணத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


