
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா – போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகள் மோதின.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்க அணி சார்பில் ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் போலரின் பலோகனும், 82-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் மாலிக் டில்மனும் கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் அமெரிக்கா காலிறுதிக்கு முந்தைய ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், தோல்வியடைந்த போஸ்னியா அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


