
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைத் தானாகப் புதுப்பிக்கும் நடைமுறையை நிறுத்திவைப்பதாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லெபனானில் ஐநா அமைதிப்படையின் கீழ் பணியாற்றும் இத்தாலிய வீரர்கள் இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த அதிரடி முடிவின் மூலம், இஸ்ரேலிய இராணுவத்துடனான கூட்டுப் பயிற்சிகளையும் இத்தாலி இனி மேற்கொள்ளாது. இஸ்ரேலின் நெருங்கிய ஐரோப்பிய நட்பு நாடாகக் கருதப்பட்ட இத்தாலி, தற்போது இராணுவ உறவில் பின்வாங்கியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


