மீண்டெழுந்த இலங்கை ஆடை ஏற்றுமதி துறை: 2025 இல் வருமானம் 5 பில்லியன் டொலராக அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. இதற்கு அமெரிக்கா (6.49%), ஐரோப்பிய ஒன்றியம் (6.76%) மற்றும் ஐக்கிய இராச்சியம் (12.95%) ஆகிய நாடுகளின் கேள்வி அதிகரிப்பே பிரதான காரணமாகும்.ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டு முழுமைக்கும் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 4.76 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 5.42% வளர்ச்சியாகும். ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி சற்று வீழ்ச்சியடைந்த போதிலும், பிரதான சந்தைகளின் பலத்தால் இலாபகரமான ஆண்டாக இது அமைந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) தெரிவித்துள்ளது.