தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தின விழா

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் விசேட தேசியக் கொடியேற்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.இலங்கை சுதந்திர தினமான 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 04-ஆம் திகதி, புதன்கிழமை, இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.இந்த தேசியக் கொடியேற்றும் விழா, காலை 8.00 மணிக்கு, தோஹா – இலங்கைத் தூதரக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கத்தாரில் வாழும் அனைத்து இலங்கையர்களையும் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தூதரகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.