
நுவரெலியா நகரில் முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று (ஜனவரி 10) பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். Uber மற்றும் PickMe போன்ற செயலி வழி போக்குவரத்து சேவைகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறிப்பாக, நுவரெலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான செயலிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிக விலை கொடுத்து வாகனங்களை கொள்வனவு செய்துள்ள தங்களுக்கு, இந்தச் செயலி வழி சேவைகளால் பாரிய வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவித்தனர்.


