ஆகாயத்தில் ஓர் அதிரடி விருந்து: கத்தாரில் மீண்டும் ஆரம்பமாகிறது Dinner in the Sky

தோஹா: நீங்கள் சாகசங்களை விரும்புபவரா? அப்படியாயின், நிலத்திலிருந்து 40 மீற்றர் உயரத்தில் பறந்தபடி, தோஹா நகரின் அழகை இரசித்தவண்ணம் உணவு உண்ணும் ஒரு அரிய சந்தர்ப்பம் இதோ உங்களுக்காகக் காத்திருக்கின்றது.

வருகின்ற ஜனவரி 14 முதல் 24, 2026 வரையான காலப்பகுதியில், 974 Stadium வளாகத்தில் இந்த ‘டின்னர் இன் தி ஸ்கை’ நிகழ்வு இடம்பெறவுள்ளது. கத்தார் சர்வதேச உணவுத் திருவிழாவை (QIFF) முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரிய சாகச விருந்தில் கலந்துகொள்ள விரும்புவோர் Platinumlist Tickets இணையத்தளம் ஊடாகத் தங்களது இடங்களை முற்பதிவு செய்து கொள்ளலாம்.

https://doha.platinumlist.net/event-tickets/dinner-in-the-sky-qatar