
உணவுப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் “கத்தார் சர்வதேச உணவுத் திருவிழா” (QIFF 2026) வரும் ஜனவரி 14 முதல் 24 வரை 974 ஸ்டேடியம் (974 Stadium Precinct) பகுதியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேரம் மற்றும் சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.திருவிழா நடைபெறும் நேரம்:வார நாட்கள் (Weekdays): மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.வார இறுதி நாட்கள் (Weekends): மதியம் 3:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை.கண்கவர் வானவேடிக்கை (Fireworks) நேரங்கள்:ஜனவரி 14 (தொடக்க விழா): இரவு சுமார் 7:30 மணியளவில் (தொடக்க விழாவிற்குப் பிறகு).ஜனவரி 15 முதல் 24 வரை: தினசரி இரவு 9:00 மணிக்கு.முக்கிய சிறப்பம்சங்கள்:ட்ரோன் ஷோக்கள்: ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோக்கள் நடைபெறும்.Dinner in the Sky: அந்தரத்தில் அமர்ந்து உணவருந்தும் மறக்க முடியாத அனுபவம்.பொழுதுபோக்கு: நேரடி கலை நிகழ்ச்சிகள், Cooking Studio-வில் சமையல் கலை பயிலரங்குகள், மற்றும் ‘Padel of Minds’ போன்ற விளையாட்டுப் போட்டிகள்.QIFF Ring: விறுவிறுப்பான போட்டிகள் மற்றும் பரிசுகள் வெல்லும் வாய்ப்பு.இந்த விழாவிற்குச் செல்ல நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை (Free Entry). கத்தாரின் சிறந்த உணவகங்களின் சுவைகளையும், சர்வதேச உணவு வகைகளையும் ஒரே இடத்தில் அனுபவிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.


