
தோஹாவில் நடைபெற்று வரும் FIDE World Rapid & Blitz Championships 2025 போட்டியின் ரேபிட் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று (29) பிளிட்ஸ் போட்டியின் முதல் நாள் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
29 இந்தியா்கள் உள்பட மொத்தம் 252 போ் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் இதில் ஓபன் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட மூவர் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மகளிர் பிரிவில் நெதர்லாந்தின் எலைன் ரோபர்ஸ் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.
மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஓபன் பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரான்சின் மேக்சிம் வாச்சியர்-லாகிரேவ் மற்றும் அமெரிக்காவின் பேபியானோ கருவானா ஆகிய மூவரும் தலா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
11-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி, உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் போட்டியின் போது கார்ல்சன் நேரமின்மையால் பதற்றமடைந்து காய்களைத் தட்டிவிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இயன் நெபோம்னியாட்சி ஆகியோர் 9 புள்ளிகளுடன் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.


