
ஏறாவூர் நிருபர்-நாஸர்
தென்னிந்திய திரைப்பட நடிகர் பத்மபூசன் விஜயகாத்தின் இரண்டாவது சிரார்த்த தினம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி அறுபத்தேழு வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
அக்னி சமூக சேவை மன்றம் மற்றும் அக்னி இசைக்குழு ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அக்னியின் தலைவர் சுப்ரமணியம் ரகுபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி , ஏறாவூர், ஐயங்கேணி , தளவாய் , எல்லைநகர் , ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்கள் உலருணவுப்பொதிகளைப் பெற்றுக்கொண்டன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் , செங்கலடி வர்த்தகர் சங்கத்தலைவர் , மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மத அனுஷ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இந்த நிறுவனம் கடந்த வருடமும் நடிகர் விஜயகாந்தின் சிரார்த்த தினத்தை அனுஷ்டித்து ஏழைகளுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கியமை குறிப்பிடதக்கது.


