
2025 ஆம் ஆண்டிற்கான சோசியல் டிவி விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சோசியல் டிவியின் பணிப்பாளர் முஹம்மட் சிறாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதியாக 24 படைப்பிரிவின் தலைமையக இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஜயவீர, விஷேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த ஊடகம், இலக்கியம், தொழில் முயற்சி போன்ற பல்துறை ஆளுமைகள் 55 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
- ஜே.எம்.பாஸித் – Excellence Digital media Award
- எம். பஹத் ஜுனைத்- சிறந்த ஊடகவியலாளர் விருது .
- ஏ.கே. ஹசன் அஹமட் – சிறந்த கிராஃபிக் மற்றும் வீடியோ எடிட்டிங் விருது.
- அஸ்ரி இப்னு அமீர் – சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது.
- முஹம்மது ஹாரிஸ் – சிறந்த இளம் டிஜிட்டல் ஊடகவியலாளர் விருது.
- தக்ஸிகா தயாளன் – சிறந்த பெண் ஆளுமை (Influencer) விருது.
- பாத்திமா சிம்ரா -சிறந்த இளம் பெண் ஊடகவியலாளர் விருது.
- ஏ.எம். கஸ்பியா பிபி – ஊக்கமளிக்கும் சிறந்த கவிஞர் விருது.
- எம்.டி.ஏ. ராஜீத் – சிறந்த குரல்வளக் கலைஞர் (Vocal Artist) விருது.
- மஹ்ரூப்.எம்.ஜபீர்- சிறந்த ஊடகவியலாளர் விருது.
- எம்.எச்.எம்.ஷிப்கான் – சிறந்த அறிவிப்பாளர் விருது.
ஆகிய விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


