கத்தாரில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிண்ணக் காட்சிப்படுத்தல் நிகழ்வு

ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான (ICC T20 Men’s World Cup) வெற்றிக் கிண்ணப் பயணத்தின் (Trophy Tour) ஒரு பகுதியாக, கத்தாரின் வெஸ்ட் எண்ட் சர்வதேச மைதானத்தில் (West End International Stadium) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Trophy காட்சிப்படுத்தல் நிகழ்வு நேற்று (15) திங்கட்கிழமை நடைபெற்றது.

கத்தாரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் மைதானத்திற்கு வருகை தந்து, உலகக் கோப்பையை நேரில் பார்வையிட்டனர். மேலும், புகைப்படங்களையும், ‘செல்பி’க்களையும் (Selfies) எடுத்து மகிழ்ந்தனர்.