புத்தாண்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி: ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

டிட்வா (Ditwah) சூறாவளியின் தாக்கத்தினால், வரும் 2026 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வுகூறியதைப் போலவே, இந்த சூறாவளி அனர்த்தம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.