கத்தாரில் வாகன இலக்கத் தகடுகளில் புதிய மாற்றம்; ‘Q’ எழுத்துடன் புதிய வடிவமைப்பு அறிமுகம்!

தோஹா: கத்தார் உள்துறை அமைச்சு (Ministry of Interior), நாட்டின் வாகன இலக்கத் தகடுகளை (Vehicle Number Plates) சர்வதேச தரத்திற்கு ஏற்பவும், நவீன தொழில்நுட்பங்களுக்கு உதவும் வகையிலும் மாற்றியமைக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

கத்தார் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, உள்துறை அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய மாற்றங்கள் என்ன? புதிய திட்டத்தின் கீழ், வாகன இலக்கத் தகடுகளின் காட்சி அடையாளம் (Visual Identity) மேம்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தனியார் வாகனங்களுக்கு (Private Vehicles) எண்களுடன் ஆங்கில எழுத்துக்கள் சேர்க்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக வாகன இலக்கத்துடன் ‘Q’ என்ற எழுத்து சேர்க்கப்படும்.

இதனைத் தொடர்ந்து வரிசைக்கிரமமாக ‘T’ மற்றும் ‘R’ ஆகிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படும்.

அமல்படுத்தப்படும் நிலைகள் (Phases): இத்திட்டம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது:

முதற்கட்டம் (Phase 1): வரும் டிசம்பர் 13, 2025 முதல் டிசம்பர் 16, 2025 வரை, ‘Sooum’ செயலி (App) மூலம் சிறப்பு இலக்கங்களைப் (Special Numbers) பெறுபவர்களுக்கு ‘Q’ எழுத்து பொறிக்கப்பட்ட பலகைகள் வழங்கப்படும்.

இரண்டாம் கட்டம் (Phase 2): ஏப்ரல் 1, 2026 முதல், புதிதாக பதிவு செய்யப்படும் (New Registrations) தனியார் வாகனங்களுக்கு புதிய வடிவமைப்புடனான பலகைகள் பொருத்தப்படும்.

மூன்றாம் கட்டம் (Phase 3): தற்போது பயன்பாட்டில் உள்ள (Existing vehicles) தனியார் வாகனங்களுக்கான பலகைகளை மாற்றுவது குறித்த காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை பொதுமக்கள் தங்கள் பழைய இலக்கத் தகடுகளையே தொடர்ந்து பயன்படுத்தலாம்.