FIFA Arab Cup 2025: ஈராக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஜோர்தான்!

கத்தாரில் நடைபெற்று வரும் 2025 ஃபிஃபா அரபு கிண்ணத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பரபரப்பான இரண்டு காலிறுதிப் போட்டிகளில் ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஜோர்தான் மற்றும் ஈராக் அணிகள் மோதின.போட்டியின் முதல் பாதியில், ஜோர்தான் அணியின் நட்சத்திர வீரர் அலி ஒல்வான் (Ali Olwan) அடித்த கோல் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. பதிலடி கொடுக்க ஈராக் அணி கடுமையாகப் போராடிய போதிலும், ஜோர்தான் அணியின் தடுப்புச் சுவரைத் தகர்க்க முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தி ஜோர்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.அரையிறுதிப் போட்டி விபரங்கள் (டிசம்பர் 15):1. முதல் அரையிறுதி: மொராக்கோ (Morocco) VS ஐக்கிய அரபு அமீரகம் (UAE)நேரம்: மாலை 5:30 மணி (17:30)மைதானம்: கலீஃபா சர்வதேச மைதானம் (Khalifa International Stadium)2. இரண்டாவது அரையிறுதி: சவூதி அரேபியா (Saudi Arabia) VS ஜோர்தான் (Jordan)நேரம்: இரவு 8:30 மணி (20:30)மைதானம்: அல் பைட் மைதானம் (Al Bayt Stadium)டிக்கெட் முன்பதிவு:இந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. போட்டிகளைக் காண விரும்பும் ரசிகர்கள் Tickets.RoadtoQatar.qa என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாகத் தங்களது டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.