
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கையின் சூறாவளிக்கு பிந்திய மீட்புப் பணிகள் குறித்த நேர்காணல் ஒன்றுக்காக தோஹாவிலுள்ள அல் ஜசீரா ஊடக தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
இந்த நேர்காணலின் போது, இலங்கையில் நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கான சர்வதேச உதவிகளை துரிதப்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அல் ஜசீரா கலையகம் மற்றும் செய்திப் பிரிவையும் அவர் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது தூதுவர் சித்தாரா கான் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அவருடன் இணைந்திருந்தனர்.


