FIFA Arab Cup 2025: இன்றைய (டிசம்பர் 09) முக்கிய போட்டிகள் விபரம்!

தோஹா: கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான FIFA அரபு கிண்ண (FIFA Arab Cup) கால்பந்து தொடரின் குழுநிலை சுற்றின் (Group Stage – Round 3) போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ளன.

இன்று நடைபெறும் போட்டிகளில் குழு C மற்றும் குழு D அணிகள் மோதவுள்ளன. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க அணிகள் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய ஆட்டங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

கத்தார் நேரப்படி இன்று நடைபெறவுள்ள போட்டிகளின் விபரம் வருமாறு:

மாலை 5:30 மணிப் போட்டிகள் (Group C):
1.எகிப்து (Egypt) vs ஜோர்தான் (Jordan)
மைதானம்: அல் பைட் அரங்கம் (Al Bayt Stadium)

2.ஐக்கிய அரபு அமீரகம் (UAE ) vs குவைத் (Kuwait)
மைதானம்: ஸ்டேடியம் 974 (Stadium 974)

இரவு 8:00 மணிப் போட்டிகள் (Group D):

3.அல்ஜீரியா (Algeria) vs ஈராக் (Iraq)
மைதானம்: கலீஃபா சர்வதேச அரங்கம் (Khalifa International Stadium)

4.பஹ்ரைன் (Bahrain) vs சூடான் (Sudan)
மைதானம்: எஜுகேஷன் சிட்டி அரங்கம் (Education City Stadium)

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இப்போட்டிகள் அனைத்தும் கத்தார் உள்ளூர் நேரப்படி குறிப்பிடப்பட்டுள்ளன.