
அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 3 பில்லியன் முதல் 5 பில்லியன் ரூபா வரையான (ரூபா300 கோடி முதல் 500 கோடி ) நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி பிற்பகல் முதல் பெய்த பலத்த மழையையும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையையும் அடுத்து, நவம்பர் 27ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் பாரிய வெள்ளம் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது.


