அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வழமைக்கு!

ரந்தெம்பே–மகியங்கனையை இணைக்கும் 132 kV (132,000 வோல்ட்) மின் பரிமாற்ற பாதையில் ஏற்பட்ட கடுமையான விபத்தினால், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் தேசிய மின்விநியோக அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல நாட்கள் மின்சாரமின்றி தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அவசர சூழலில், இன்கினியாகல மின்நிலையத்திலிருந்து கிடைத்த குறைவான மின்சாரத்தை மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க இலங்கை மின்சார சபை இடைவிடாது பணியாற்றியது.

பல நாட்கள் இடைவிடாது உழைத்த பொறியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மின்சார சபை ஊழியர்களின் கடின உழைப்பின் பலனாக தற்காலிக மின் பரிமாற்ற கோபுரம் இன்று மீண்டும் எழுப்பப்பட்டது.

இந்த பணியில் நேரடியாக ஈடுபட்ட பொறியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த அனர்த்த நிலையை புரிந்து கொண்டு மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் வரை பொறுமையாக இருந்த மக்களுக்கும், இக்கட்டான நேரத்தில் எந்த விதத்திலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-இலங்கை மின்சார சபை