
கத்தாரில் நடைபெறவுள்ள FIFA Arab Cup Qatar 2025™ போட்டிகளுக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் நாளில், செல்லுபடியாகும் போட்டி டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் தோஹா மெட்ரோ (Doha Metro) ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் ஸ்டேடியங்களுக்கு எளிதாக சென்றடைய உதவுவதும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதுமே இந்த முடிவின் நோக்கமாகும்.


