
FIFA U-17 World Cup அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் U-17 அணி பிரேசிலை 6-5 என்ற பெனால்டி ஷூட் அவுட் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் நவம்பர் 27ஆம் தேதி, தோஹாவில் உள்ள Khalifa International Stadium மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல், ஆஸ்திரியாவை எதிர்கொள்ளும்.
இதே நேரத்தில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரேசிலும் இத்தாலியும் வியாழக்கிழமை ஆஸ்பயர் மண்டலத்தின் பிட்ச்–7 இல் மோதுகின்றன.


