இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தீவிர பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தகைய நிலைமையிலும் தொடரை நிறுத்தாமல் விளையாட தீர்மானித்த இலங்கை அணியின் துணிச்சலுக்கும் விளையாட்டு மனப்பான்மையை பாராட்டி நன்றி தெரிவித்து பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பு காணொளி வெளியிட்டுள்ளனர்.