சல்மான் கான் முதல் முறையாக கத்தாரில்! ‘த பாங்: த டூர் ரிலோடெட்’ நவம்பர் 14ஆம் திகதி….

தோஹா: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முதல் முறையாக கத்தாரில் நேரடி இசை, நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியுடன் ரசிகர்களை கவரவிருக்கிறார்.
‘Da-Bangg: The Tour Reloaded’ எனும் பெயரில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நவம்பர் 14 ஆம் தேதி Asian Town Amphitheatre-ல் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் சேர்ந்து பிரபல நடிகைகள் தமன்னா பாட்டியா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் நடன கலைஞர் பிரபுதேவா, நகைச்சுவை கலைஞர் சுனில் க்ரோவர், தொகுப்பாளர் மனீஷ் பாலி, பாடகர் ஸ்டெபின் பென் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது Platinumlist, Q-Tickets, Virgin Tickets, Snoonu போன்ற தளங்களில் விற்பனைக்கு உள்ளன.