ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இரு வெண்கலப் பதக்கங்கள்!

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீ ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஈட்டி எறிதல் : மாத்தளை, யட்டவத்த, வீர பராக்ரம இரண்டாம் நிலைப் பாடசாலையின் மாணவரான சத்துர துலஞ்சன ஜயதிஸ்ஸ , 62.51 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

400 மீ ஓட்டம்: நீர்கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த ஷானுக கோஸ்டா , 47.72 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.