கத்தாரில் FIFA ARAB CUP மற்றும் FIFA U-17 WORLD CUP போட்டிகளிற்கான டிக்கெட்டுகள் விற்பனை திகதிகள் அறிவிப்பு

கத்தாரில் நடைபெறவுள்ள FIFA Arab Cup மற்றும் 17 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இந்த வாரம் விற்பனைக்கு வருகிறது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

FIFA Arab Cup போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 30ஆம் திகதி மாலை 3.00 மணிமுதல் விற்பனைக்கு வரும். இதன் விலை QAR 25 முதல் ஆரம்பமாகிறது.

அதேவேளை, 17 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் Visa அட்டையாளர் ரசிகர்களுக்காக சிறப்பாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 3 முதல் 27 வரை Aspire Zone வளாகத்தில் 104 போட்டிகளுடன் 17 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 1 முதல் 18 வரை FIFA Arab Cup போட்டிகள் நடைபெறும். 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்கப் போட்டி Al Bayt மைதானத்தில், கத்தார் அணியும் பாலஸ்தீனம் அல்லது லிபியா அணியும் இடையே நடைபெறும்.

இறுதிப் போட்டி டிசம்பர் 18ஆம் திகதி Lusail மைதானத்தில் நடைபெறும்.

ரசிகர்களுக்காக சிறப்பு Follow My Team டிக்கெட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.