சவூதியில் ஹூதி தாக்குதல்கள்: ஆசியக் கிண்ணப் போட்டியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை

ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டி 2028ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம்
சவூதி அரேபியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டி, பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு 2028ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு (AFC) தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சாத்தியம் குறித்து ஆராயப்படுகிறது.

எனினும், போட்டியை ஒத்திவைப்பது தொடர்பில் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என AFC தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா தெரிவித்துள்ளார். நவம்பர் மாத இறுதிவரை நிலைமையைக் கண்காணித்து இறுதி முடிவெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி 2027 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, பெப்ரவரி 5ஆம் திகதி நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.