
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்குள்ள பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு இணையவழிக் கல்விக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தரவின்படி, ரியாத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் முழு வாரத்திற்கும் இணையவழிக் கல்வி முறையில் இயங்கும் என பெற்றோருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இத்தகைய உத்தரவு இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


