சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர அறிவிப்பு! உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்த்து, நம்பகமான தகவல்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகமும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகமும் வழமைபோன்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக உதவிகளுக்கு 0549477567 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.

இதற்கிடையில், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பல விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்துச் செய்துள்ளதாகவும், கொழும்பு–ரியாத் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.