
கொழும்பு: இந்தியா – இலங்கை இடையிலான முதன்முதல் சைபர் பாதுகாப்பு ஆலோசனை பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது. இருநாடுகளின் டிஜிட்டல் கூட்டாண்மையின் கீழ் இந்த உயர்மட்ட கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
CERT-In இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல், வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் அமித் சுக்லா தலைமையிலான இந்தியக் குழு, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளைச் சந்தித்தது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாகும் சைபர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பான நிதி மண்டல பராமரிப்பு மற்றும் சைபர் ஆளுகை பற்றி இருதரப்பும் விவாதித்தன. மேலும், இலங்கை CERT அதிகாரிகளுடன் இணைந்து சைபர் நெருக்கடி மேலாண்மை, அச்சுறுத்தல் மதிப்பீடு, திறனை மேம்படுத்துதல் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடர்பான தேசிய மூலோபாயங்களை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டது.


