சவூதி அரேபியாவில் 2027 ஆசியக் கோப்பை கால்பந்து: புதிய திட்டங்கள் அறிமுகம்!

2027 ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் சவூதி அரேபியா, போட்டியில் பங்கேற்கும் அணிகள் மற்றும் ரசிகர்களுக்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

வரலாற்றிலேயே முதல்முறையாக, பங்கேற்கும் 24 நாடுகளின் அணிகளுக்காக நாடு முழுவதும் பிரத்யேக ‘பயிற்சி முகாம்கள்’ (Team Base Camps) அமைக்கப்படவுள்ளன. இதற்காக 31 பயிற்சி மைதானங்களும் 40 விடுதிகளும் தயாராக உள்ளதாக உள்ளூர் அமைப்புக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மை அல்ஹெலாபி தெரிவித்துள்ளார்.

மேலும், ரசிகர்களின் பயணத்தை எளிதாக்க ‘அஹ்லான்’ (Ahlan) எனும் டிஜிட்டல் செயலியும், அதில் 24 மணி நேர செயற்கை நுண்ணறிவு (AI) சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் டிக்கெட், விசா மற்றும் போக்குவரத்து தகவல்களை ஒரே இடத்தில் பெற முடியும்.

ரியாத், ஜித்தா மற்றும் அல் கோபார் ஆகிய மூன்று நகரங்களில் 2027 ஜனவரி 7 முதல் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.