
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சர்வதேச சரக்கு போக்குவரத்துப் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 14 அதிநவீன லெம்போர்கினி சொகுசு கார்கள், கடல் மார்க்கமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அங்கிருந்து 7 கொள்கலன்கள் மூலம் தரைவழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இலங்கை மதிப்பில் தலா 50 கோடி முதல் 100 கோடி ரூபா வரை பெறுமதியான இந்த வாகனங்கள், சரக்கு விமானங்கள் ஊடாக டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை இலங்கையை ஒரு முக்கிய கடல்-விமான (Sea-Air Transshipment) சரக்கு பரிமாற்ற மையமாக நிலைநிறுத்தியுள்ளது.


