நாளை முதல் ஆகஸ்ட் 28 வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கண்டி எசல பெரஹெராவின் முதலாவது கும்பல் பெரஹெரா வீதி உலா வரவுள்ள நாளை (18) முதல், பெரஹெரா நிறைவடையும் வரும் (28) ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கண்டி கடவத் சதர மற்றும் கங்கவட்ட கோரளய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

மேலும், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தரம்போத்த கிராம நிலதாரி பிரிவில் பிரதான வீதியை ஒட்டியுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது