
இலங்கை ரயில்வே திணைக்களம் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்னா குணசேன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவிசாவளையிலிருந்து ரத்னபுரி வரை இரயில் பாதையை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு டிசம்பருக்குள் நிறைவடையும்.
கொழும்பு புறநகர் ரயில் மின்மயமாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும். பொல்கஹவெல – குருநாகல் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றவும், கோஸ்கம – அவிசாவளை இடையிலான போக்குவரத்து நெரிசல்களைச் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கடலோரப் பாதையில் 12 பாலங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. தடையால் தாமதமான 10,000 இரயில் கிளிப்புகள் ஒரு மாதத்திற்குள் கிடைக்கப்பெறும்.
5 புதிய டீசல் ரயில் பெட்டிகளை (DMU) வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாகும் என்றும், 2027 முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் இரயில்கள் வாங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


