
கொழும்பு, பொரளை – மெகசின் சிறைச்சாலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 40 கைதிகள் சம்பந்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து, சிறைச்சாலையின் வெளிப்பக்கப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) உடனடியாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


