
வரும் வார இறுதி நாட்களான ஆகஸ்ட் 6 முதல் 8 (2026) வரை கத்தாரின் சில பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்து, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் (Qatar Meteorology Department) அறிவித்துள்ளது.இக்காலப்பகுதியில் சில இடங்களில் உள்ளூர் மேகக்கூட்டங்கள் உருவாகி மழைப்பொழிவைக் கொண்டுவரக்கூடும் என சமீபத்திய வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிலவும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


