சீரற்ற வானிலை: 3 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கட்டம் 3 ஆம் கட்டத்தின் கீழ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.