
ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன், போடைஸ் மற்றும் டயகம ஆகிய இடங்களை இணைக்கும் குறுக்கு வழியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மற்றும் சாரதிகள் குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹட்டன் வலய காவல்துறையின் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்


