அஸ்வெசும பயனாளர்களுக்கு நற்செய்தி; ஜூலை மாத கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பு!

அஸ்வெசும ஜூலை மாதத்திற்கான முதியோர் நலன்புரி கொடுப்பனவு இன்று (31) 70 வயதிற்கு மேற்பட்ட பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 621,638 முதியோர்களுக்கு 310 கோடியே 81 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 77,324 முதியோர்களுக்கு 38 கோடியே 66 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 698,962 பயனாளிகளுக்காக 349 கோடியே 48 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி விடுவிக்கப்படுகின்றது.

தகுதியான பயனாளிகள் அனைவரும் இன்று முதல் தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.