வாட்ஸ்அப் யூசர்களுக்கு குட் நியூஸ்: மொபைல் எண் இல்லாமல் சாட் செய்யும் புதிய வசதி!

===============

அதிகமானோரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்த புதிய அப்டேட்டை அறிமுகம் செய்கிறது. இனி பயனர்கள் தங்களின் மொபைல் எண்களைப் பகிராமல், வெறும் ‘யூசர் நேம்’ (Username) மூலமாகவே மற்றவர்களுடன் உரையாட முடியும்.

இதன் மூலம் புதிய நபர்கள் செய்தி அனுப்பும்போது மொபைல் எண் அவர்களுக்குத் தெரியாது.பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை இந்த வாரம் முதல் முன்பதிவு செய்யலாம். இதற்காக Settings > Account > Username என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவுள்ள இந்த அம்சம், வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.