
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதன்மை நாடான அமெரிக்கா, இப்போட்டியில் பங்கேற்கும் நாடான ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பையின் குழு சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜூன் மாதத்தில், ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இதன் மூலம், உலகக் கோப்பையை நடத்தும் நாடே, சக போட்டியாளரான ஒரு நாட்டுடன் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடும் அசாதாரண சூழல் உருவானது. இத்தாக்குதல்கள் நடந்த சில மணித்தியாலங்களிலேயே விளையாடிய ஈரான், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.


