பஹ்ரைன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: பிராந்தியத்தில் பதற்றம்!

================

பஹ்ரைன் நாட்டின் மீது இன்று அதிகாலை வேளையில் ஈரான் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஈரானின் இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டங்கள் மற்றும் பஹ்ரைனின் நாட்டின் இறையாண்மையை “பாரதூரமாக மீறும் செயல்” என பஹ்ரைன் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் வன்மையாகக் கண்டித்துள்ளது.பஹ்ரைன் எல்லைக்குள் பல ட்ரோன்கள் இலக்கு வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும், அவை தாக்கிய துல்லியமான இடங்கள் அல்லது இலக்குகளின் தன்மை குறித்த விபரங்களை அமைச்சு வெளியிடவில்லை. இந்தத் தாக்குதலானது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச முயற்சிகளைப் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.