
அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரின் ‘சுற்று 32’ (Round of 32) நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள முதல் 7 அணிகளின் பட்டியலை ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தங்களது பிரிவுகளில் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கான நாக்-அவுட் வாய்ப்பை உறுதி செய்துள்ள அந்த முதல் 7 முன்னணி அணிகள்:
🇲🇽 மெக்ஸிகோ
🇺🇸 அமெரிக்கா
🇩🇪 ஜெர்மனி
🇦🇷 அர்ஜென்டினா
🇫🇷 பிரான்ஸ்
🇳🇴 நார்வே
🇨🇴 கொலம்பியா
உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் மோதுவதால், மீதமுள்ள 25 இடங்களைக் கைப்பற்ற லீக் சுற்றில் தற்பொழுது கடுமையான போட்டி நிலவி வருகிறது.


