
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 6-ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணி தனது கோல் கணக்கைத் தொடங்கியது. கேன்செலோ கொடுத்த அசிஸ்ட்-ஐ கச்சிதமாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் மூலம், உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் 6 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். முன்னதாக, காங்கோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் வெற்றிபெறத் தவறியதும், ரொனால்டோ கோல் அடிக்காததும் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த ஆட்டத்தின் மூலம் அவர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


