2026 பிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டி சிறப்பு தொகுப்பு!

உலகக் கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026 FIFA உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இம்முறை மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கும் மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா மோதலுடன் தொடர் ஆரம்பமாகி, ஜூலை 19 அன்று நியூயார்க்கில் இறுதிப் போட்டி நடைபெறும்.

கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. இவை 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, குழுச் சுற்றில் 72 போட்டிகளும், நாக்-அவுட் சுற்றில் 32 போட்டிகளுமாக மொத்தம் 104 ஆட்டங்கள் 16 நகரங்களில் நடத்தப்படவுள்ளன. மேலும், கேப் வெர்டே, குராசாவோ, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் முதல் முறையாக தகுதி பெற்றுள்ளன. கனடாவில் உலகக் கோப்பை நடப்பதும் இதுவே முதன்முறையாகும்.

இம்முறை FIFA அமைப்பு இதர சலுகைகளுடன் சேர்த்து மொத்தம் ரூ. 8,270 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதுடன், பரிசுத்தொகைக்காக மட்டும் ரூ. 6,675 கோடியை வழங்கவுள்ளது.

சாம்பியன் (1ஆம் இடம்): ரூ. 475 கோடி.

2ஆம் இடம்: ரூ. 313 கோடி.

3ஆம் மற்றும் 4ஆம் இடம்: முறையே ரூ. 275 கோடி மற்றும் ரூ. 256 கோடி.

ஏனைய இடங்கள்: 5 முதல் 8 இடங்களுக்கு தலா ரூ. 180 கோடியும், தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ரூ. 119 கோடியும் உறுதியாக வழங்கப்படவுள்ளது.

அனைத்துத் தொடர்களிலும் பங்கேற்ற ஒரே அணியான பிரேசில் 5 முறை சாம்பியனாகத் திகழும் வேளையில், 4 முறை கிண்ணம் வென்ற இத்தாலி தொடர்ந்து 3ஆவது முறையாக தகுதி பெறாமல் ஏமாற்றமளித்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, ரொனால்டோ மற்றும் நெய்மார் ஆகிய ஜாம்பவான்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக அமையலாம் என்பதால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.