பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கத்தார் ஏர்வேஸின் பிரத்யேக விமானம் அறிமுகம்!

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, அதன் உத்தியோகபூர்வ பங்காளரான கத்தார் ஏர்வேஸ் பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய போயிங் 777 விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை தீமில் உட்புறமும் வெளிப்புறமும் அலங்கரிக்கப்பட்டுள்ள இவ்விமானம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளது.