இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் திட்டமிட்டபடி கொழும்பில் நடக்கும்

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி, திட்டமிட்டபடி கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் இணை நடத்துனரான இலங்கை, இந்த இக்கட்டான சூழலில் போட்டியை உறுதி செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

குறித்து இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.