
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடுகளில் ஒன்றான ‘வெப் சமிட்’ (Web Summit), வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி கதார் தலைநகர் தோஹாவில் தொடங்குகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிக முக்கியமான இந்த நிகழ்வில் பங்கேற்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு DECC நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Scale AI, Figma, IBM போன்ற சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் நேரலையில் உரையாற்ற உள்ளனர்.Ticket : https://qatar.websummit.com/tickets/attendees/இந்த ஆண்டு மாநாட்டின் சிறப்பம்சமாக, கத்தார் அறக்கட்டளையின் தலைவர் மேதகு ஷேக்கா மோசா பிந்த் நாசர் அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற Canva நிறுவனத்தின் இணை நிறுவனர் கிளிஃப் ஓப்ரெக்ட், AI துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ElevenLabs நிறுவனத்தின் மதி ஸ்டானிசெவ்ஸ்கி மற்றும் முதலீட்டுத் துறை நிபுணர் லேரி லி ஆகியோர் மேடையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.தொழில்நுட்பம், கல்வி மற்றும் எதிர்காலப் பொருளாதாரம் குறித்த மிக முக்கியமான உரையாடல்கள் தோஹாவில் நிகழவுள்ளன. சர்வதேச அளவில் அதிக தேவை இருப்பதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.”


