
வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதுஅமெரிக்க சினூக் ஹெலிக்கொப்டர்கள் வெனிசுலாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் சுமார் 7 இடங்களில் இதுவரை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதல்கள் தொடர்பில் வெனிசுலா அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்தார்.இதில் விரிவாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் அதிகரித்தல் என்பன அடங்கும்.வெனிசுலாவில் இருந்து கப்பல்கள் வழியாகவும் படகுகள் வழியாகவும் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே, கரீபியன் கடல் பகுதியில் ராணுவத்தை குவித்து ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க ராணுவம் கரீபியன் கடல் பகுதியில் வெனிசுலா கப்பல்கள் மீது தாக்கல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் அரங்கேறியுள்ளது.


