FIFA Intercontinental Cup 2025 QATAR – பெனால்டியில் ஃபிளமெங்கோவை வீழ்த்தி சாம்பியன் ஆனது PSG! 

கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா இன்டர்கான்டினென்டல் கோப்பை (FIFA Intercontinental Cup) இறுதிப் போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 2-1 என்ற கணக்கில் பிரேசிலின் ஃபிளமெங்கோ அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் ஆட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும், கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. 

இதில் PSG அணியின் மாற்று கோல் கீப்பரான மத்வே சஃபோனோவ் (Matvei Safonov) அபாரமாக செயல்பட்டு நான்கு பெனால்டி வாய்ப்புகளைத் தடுத்து, தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.